இயக்குனராகும் கமல் மகள்!
12/23/2010 2:16:36 PM
'சினிமாவுக்கு வருவேன். திரைக்கு பின்னால்தான் பணியாற்றுவேன். நடிக்க மாட்டேன்' என்று கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா கூறினார்.நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். 'உன்னைப்போல் ஒருவன்' படத்துக்கு இசை அமைத்ததுடன் 'லக்' படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். '7ம் அறிவு' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரது தங்கையும், கமலின் இரண்டாவது மகளுமான அக்ஷரா, நடனத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இதனையடுத்து 2 ஆண்டுகள் கழித்து பட டைரக்ஷனில் ஈடுபடப்போவதாக அக்ஷரா தெரிவித்துள்ளார்.
Source: Dinakaran
Post a Comment