12/28/2010 6:12:27 PM
'உள்ளத்தை அள்ளித்தா' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரம்பா. இவரது வீடு சாலிகிராமம் எம்ஜிஆர் தெருவில் உள்ளது. ரம்பாவுக்கும், கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தமிழக ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த ரம்பா, திருமணம் முடிந்ததும் நடிப்புக்கு முழுக்குப் போட்டார். கனடாவில் வசிக்க ஆரம்பித்தார். சென்னைக்கும் அடிக்கடி வந்து, தனது வீட்டில் தங்குவார்.
சில நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் கனடா சென்றார். வீட்டில் வாட்ச்மேன் தீன் டெக்ரூஸ் (45) என்பவர் மட்டும் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டின் மீது 2 பேர் பைக்கில் வந்து டியூப் லைட்டை வீசி தாக்குதல் நடத்தினர். டியூப் லைட் வெடித்து சிதறியதால் பயங்கர சத்தம் கேட்டது. வாட்ச்மேன் ஓடி வருவதற்குள் பைக்கில் வந்த ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இது குறித்து, விருகம்பாக்கம் போலீசில் தீன் டெக்ரூஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சிலர் ரம்பா வீட்டின் அருகே மது அருந்தியுள்ளனர். இதைப் பார்த்து வாட்ச்மேன் சத்தம்போட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற ஆசாமிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரம்பா வீட்டில் டியூப் லைட்டால் நடத்தியது சாலிகிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment