நடன இயக்குனர் ‘காதல் கந்தாஸ்’ திருமணம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடன இயக்குனர் ‘காதல் கந்தாஸ்’ திருமணம்
12/25/2010 3:56:22 PM
'காதல்' படத்தில் அறிமுகமாகி 'வெயில்', 'எம் மகன்', 'அங்காடி தெரு', 'நான் மகான் அல்ல' உட்பட ஏராளமான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் 'காதல்' கந்தாஸ். இவருக்கும் ராஜபாளையத்தைச் சேர்ந்த பொன்லட்சுமிக்கும் நவம்பர் 12&ம் தேதி வடபழனி முருகன் கோவிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது. திருமண வரவேற்பு விழா இன்று மாலை 6 மணிக்கு பாம்குரோவ் ஓட்டலில் நடக்கிறது. 'நானும் பொன்லட்சுமியும் 11 ஆண்டுகள் நண்பர்களாக இருந்தோம். பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார்கள். பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டோம்' என்றார் காதல் கந்தாஸ்.


Source: Dinakaran
 

Post a Comment