12/23/2010 1:49:21 PM
நடிகைகள் ஆண்ட்ரியா, மம்தாவுக்கு தான் இசையமைக்கும் படங்களில் பாட வாய்ப்பு தருக¤றார் தேவிஸ்ரீ பிரசாத். இதனால் கிசு கிசுக்களிலும் சிக்கி வருகிறார். இது பற்றி அவர் கூறியது: புதிய குரல்களை பயன்படுத்துவதுதான் இப்போதைய டிரெண்ட். இசையை முறைப்படி கற்ற நடிகைகள், ஏற்கனவே பாடகிகளாக உள்ளனர். அவர்களைத்தான் எனது படங்களில் பாட வைத்திருக்கிறேன். அந்த விதத்தில் நான் இசையமைத்த சில படங்களில் மம்தாவும் 'மன்மதன் அம்பு' படத்தில் ஆண்ட்ரியாவும் பாடியுள்ளனர். இது போல் கிசு கிசுக்கள் பரவுவது சகஜம்தான். அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குத்து, டிஸ்கோ டைப் பாடல்களுக்கு இடையே மெலடி பாடல்களுக்கும் முக்கியத்துவம் தருகிறேன். எனது படத்தில் 2 மெலடியாவது இடம்பெறும் வகையில் பார்த்துக் கொள்கிறேன். இசை ஆல¢பம் வெளியிடும் திட்டம் உள்ளது. அடுத்த ஆண்டு அது பற்றி முடிவு எடுப்பேன்.
Post a Comment