12/22/2010 10:43:49 AM
'அவன் இவன்' படப்பிடிப்பில் நடந்த விபத்தில் விஷால் படுகாயமடைந்தார். பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர், மது ஷாலினி நடிக்கும் படம் 'அவன் இவன்'. இதில் ஆர்.கே. வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வத்தலகுண்டு அருகே நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. சூப்பர் சுப்பராயன் காட்சியை அமைத்தார். ஆர்.கே.வும் விஷாலும் மோதுவது போல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ரிஸ்க்கான காட்சியில் நடிக்க, டூப் போடலாம் என்று பாலா கூறினார். விஷால் மறுத்து, தானே நடிப்பதாக கூறினாராம். ஆர்.கே.வை நோக்கி குதிக்கும் போது, சம்பந்தப்பட்ட இடத்தை விட்டுவிட்டு தவறுதலாக வேறொரு இடத்தில் விழுந்தார் விஷால். இதில் அவரது இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. கீழே விழுந்து கிடந்த விஷாலால் எழுந்துகொள்ள முடியவில்லை. இதையடுத்து படக்குழுவினர் அவரைத் தூக்கினர். அப்போது தோள்பட்டை இறங்கியிருப்பது தெரிந்தது. வலியால் துடித்த அவரை, அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
Post a Comment