சென்னை ஏர்போர்ட்டில் அதிகாலை வரை விஜயகுமார் – வனிதா கடும் மோதல்
12/28/2010 11:37:08 AM
இதன்பிறகு பேசிய வனிதா, 'விஜயகுமார் பொய் சொல்கிறார். மகனை வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்' என்று கத்தினார். இந்த தகராறு அதிகாலை 4 மணி வரை நடந்ததால் போலீசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், டில்லியில் உள்ள ஆகாஷிடம் போனில் பேசினர். அவர், 'நான்தான் ஹரியை விஜயகுமாரிடம் கொடுத்தேன்' என்றார். இதையும் வனிதா நம்பவில்லை. இதன்பிறகு ஆகாஷ் கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபேக்ஸ் செய்தார். இதையும் வனிதா நம்பவில்லை. இதனால் ஹரியை போலீசாரே வைத்துக்கொண்டு மகேஸ்வரியிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டனர்.
இதுசம்பந்தமாக விஜயகுமாரும் வனிதாவும் தனித்தனியாக விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தனர். 'முதல் கணவரும் விஜயகுமாரும் சேர்ந்து நாடகம் நடத்துகின்றனர். கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் இருக்க சதி நடக்கிறது. இதுபற்றி போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுக்கப்போகிறேன்'என வனிதா கூறினார். உதவி கமிஷனர் குப்புசாமி கூறுகையில், ''விஜயகுமார், வனிதா இருவரும் ஒருவர் மீது ஒருவர் மீது புகார் கொடுத்துள்ளனர். இரண்டு புகாரின் அடிப்படையில் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளோம். முதல் கணவர் ஆகாஷ் கூறியபடி பாட்டி மகேஸ்வரியை வரவழைத்து ஹரியை ஒப்படைத்துவிட்டோம். ஒப்படைக்கும்போது கோர்ட் உத்தரவை நீங்கள் நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்'' என்றார்.
12/28/2010 11:37:08 AM
நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதாவுக்கும் இடையே குழந்தை ஹரி பிரச்னை விசுவரூபம் எடுத்துள்ளது. மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் விஜயகுமாரும் பேரன் ஹரியும் வருவதாக தெரியவந்ததையடுத்து, வனிதாவும் அவரது கணவர் ஆனந்தராஜூம் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். 10.20 மணியளவில் விமானத்தில் இருந்து பேரனுடன் விஜயகுமார் இறங்கினார். இதை பார்த்தவுடன் வனிதா ஓடிச் சென்றார். 'என் மகனை என்னிடம் கொடுத்துவிடுங்கள்' என விஜயகுமாரிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு விஜயகுமார், 'பேரனை உன்னிடம் ஒப்படைக்க முடியாது' என்றார். இதனால் இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்து, விமான நிலைய போலீசார் வந்தனர். விஜயகுமாரையும் வனிதாவையும் சமாதானப்படுத்தினர். ஆனால் இருவரும் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் குழந்தை ஹரியை விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து இருவரையும் சமாதானப்படுத்தினர். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது வனிதா, 'கோர்ட் உத்தரவுப்படி மகனை என்னிடம் ஒப்படைக்கவேண்டும். அதுவரை முதல் கணவர் ஆகாஷிடம்தான் இருக்கவேண்டும். விஜயகுமாரிடம் இருந்தால் பாதுகாப்பு இருக்காது' என்றார். ஆனால் விஜயகுமார், 'ஆகாஷிடம்தான் ஹரி இருந்தான். அவர் டில்லி சென்றதால் ஐதராபாத்தில் இருந்த என்னிடம் ஹரியை ஒப்படைத்தார். சென்னைக்கு செல்லும்போது என் அம்மா மகேஸ்வரியிடம் ஹரியை கொடுத்துவிடுங்கள்' என்று கூறியிருக்கிறார். இதன்படி ஒப்படைக்கப் போகிறேன்' என்றார்.இதன்பிறகு பேசிய வனிதா, 'விஜயகுமார் பொய் சொல்கிறார். மகனை வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்' என்று கத்தினார். இந்த தகராறு அதிகாலை 4 மணி வரை நடந்ததால் போலீசுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், டில்லியில் உள்ள ஆகாஷிடம் போனில் பேசினர். அவர், 'நான்தான் ஹரியை விஜயகுமாரிடம் கொடுத்தேன்' என்றார். இதையும் வனிதா நம்பவில்லை. இதன்பிறகு ஆகாஷ் கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு ஃபேக்ஸ் செய்தார். இதையும் வனிதா நம்பவில்லை. இதனால் ஹரியை போலீசாரே வைத்துக்கொண்டு மகேஸ்வரியிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டனர்.
இதுசம்பந்தமாக விஜயகுமாரும் வனிதாவும் தனித்தனியாக விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தனர். 'முதல் கணவரும் விஜயகுமாரும் சேர்ந்து நாடகம் நடத்துகின்றனர். கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமல் இருக்க சதி நடக்கிறது. இதுபற்றி போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுக்கப்போகிறேன்'என வனிதா கூறினார். உதவி கமிஷனர் குப்புசாமி கூறுகையில், ''விஜயகுமார், வனிதா இருவரும் ஒருவர் மீது ஒருவர் மீது புகார் கொடுத்துள்ளனர். இரண்டு புகாரின் அடிப்படையில் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளோம். முதல் கணவர் ஆகாஷ் கூறியபடி பாட்டி மகேஸ்வரியை வரவழைத்து ஹரியை ஒப்படைத்துவிட்டோம். ஒப்படைக்கும்போது கோர்ட் உத்தரவை நீங்கள் நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்'' என்றார்.
Source: Dinakaran
Post a Comment