12/30/2010 4:43:29 PM
பல தமிழ்ப் படங்களின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு படத்தின் ஷூட்டிங்கில் பெரும்பாலும் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களும் தமிழ் ஸ்டன்ட் நடிகர்களுமே பணியாற்றினர். இதனால் தெலுங்கு பட தொழில்நுட்பக் கலைஞர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஐதராபாத்தில் ஷூட்டிங் நடத்தும்போது, தெலுங்கு கலைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் மோகன்லால், ஜெயராம், திலீப் இணைந்து நடிக்கும் 'சைனா டவுன்' பட ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்க இருந்தது. இதற்காக பிரமாண்ட செட்டும் அந்த ஸ்டுடியோவில் போடப்பட்டது. இங்கு 25 நாள் தொடர்ந்து ஷூட்டிங் நடத்த இயக்குனர் ரபி முடிவு செய்திருந்தார். தொழில்நுட்பக் கலைஞர்கள் ஸ்டிரைக்கால் பிற மொழிப் படங்களின் ஷூட்டிங் ஆந்திராவில் பாதிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் படமும் இதில் சிக்கிவிட்டது. இதனால் படத்துக்கு போடப்பட்ட செட்டை கலைத்துள்ளனர். ஐதராபாத்துக்கு பதிலாக ஊட்டியில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக படக்குழு ஊட்டி பறந்துள்ளது.
Post a Comment