பாடலாசிரியருக்கு வாய்ப்பு கொடுத்த சினேகன்
12/10/2010 3:36:23 PM
ஒரு பாடலாசிரியர் இன்னொரு பாடலாசிரியருக்கு வாய்ப்பு கொடுப்பது குதிரைக்கொம்பு. ஆனால், சினேகன் கொடுத்துள்ளார். 'யோகி'யில் நடிகராக அறிமுகமான அவர், சில படங்களுக்கு பாட்டு எழுதுகிறார். என்றாலும், நடிப்பு ஆசை விடவில்லை. 'உயர்திரு 420' படத்தில் ஹீரோவாக நடித்து வரும் அவர், தனக்கு ஜோடியாக மேக்னா சுந்தரை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்துக்கு தானே பாட்டு எழுதினால் நன்றாக இருக்காது என்று நினைத்த சினேகன், டாக்டர் கிருதியாவை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 'சினேகன் செய்த இந்த விஷயம், பெருந்தன்மையானது' என்று நெகிழ்கிறார், கிருதியா.
Source: Dinakaran
Post a Comment