12/14/2010 11:52:28 AM
80-களில் கொடி கட்டி பறந்தவர் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தையடுத்து சில்க்கின் வாழ்க்கையை மையமாக வைத்து 'தி டர்ட்டி பிக்சர்' என்ற படத்தை தமிழ், இந்தியில் இயக்குகிறார் மிலன் லுத்ரியா. சில்க் ரோலில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே வடநாட்டில் நடந்த இளம்பெண் மர்ம சாவு பற்றி உருவாகும் 'நோ ஒன் கில்ட் ஜெசிகா' என்ற நிஜ கதையில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்கும்முன் இறந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவரைப் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதேபோல் சில்க் வேடத்தில் நடிப்பதற்கு முன் அவரைப்பற்றிய விவரங்களையும், அவரது மேனரிசம் பற்றியும் தெரிந்துகொள்ள முடிவு செய்துள்ளார். ஆந்திராவில் சில்க் பிறந்த ஊரான எலுரு என்ற இடத்துக்கு வித்யாபாலன் விரைவில் செல்கிறார். அங்குள்ளவர்களிடம் ஸ்மிதாவை பற்றிய விவரங்களை கேட்டறிகிறார். பின்னர் சென்னை வரும் அவர், சில்க்கிடம் நட்பாகப் பழகியவர்களை சந்தித்து விவரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளார். அதன்பிறகே இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார்.
Post a Comment