12/20/2010 12:23:54 PM
'யுத்தம் செய்' படத்தில் இயக்குனர் அமீருடன் ஆடியது ஜாலியான அனுபவம் என்றார் நீது சந்திரா. அவர் மேலும் கூறியதாவது: நான் நடித்துள்ள 'நோ பிராப்ளம்' என்ற இந்திப் படம் சமீபத்தில் ரிலீசாகியுள்ளது. இதில் தற்காப்புக்கலை தெரிந்த பெண்ணாக நடித்துள்ளேன். நான் ஏற்கனவே 'டேக்குவாண்டோ'வில் ப்ளாக் பெல்ட் வாங்கியிருப்பதால் சன்டைக்காட்சிகளில் நடிக்க ஈசியாக இருந்தது. இதையடுத்து இன்னும் இரண்டு இந்திப் படங்களில் நடித்து வருகிறேன். தமிழில் அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறேன். இது காதல் கதைதான் என்றாலும் அமீர் வித்தியாசமாக திரைக்கதை அமைத்துள்ளார். அவர் படங்களில் எப்போதும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது. மிஷ்கின் இயக்கும் 'யுத்தம் செய்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளேன். இதில் அமீருடன் ஆடியது ஜாலியான அனுபவமாக இருந்தது. இவ்வாறு நீது சந்திரா கூறினார்.
Post a Comment