எங்கும் ஓடி ஒழியவில்லை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எங்கும் ஓடி ஒழியவில்லை

12/29/2010 11:49:36 AM

குடும்ப பிரச்னைகள் ஒரு பக்கம் வீசிக் கொண்டிருந்தாலும் தனது அடுத்த படத்துக்கான தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறார் அருண் விஜய். ஆக்ஷன் ரூட்டை பிடித்தவர் அதற்கான அத்தனை¬யும கற்று வருகிறார். அமெரிக்காவில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் பங்கேற்று திரும்பியிருக்கிறார்.

தலைமறைவாகி விட்டதாக, உங்கள் சகோதரி புகார் சொல்லியிருக்கிறாரே?

நான் அமெரிக்காவில் நடந்த எனது குடும்ப நிகழ்ச்சிக்கும், ஸ்கை டைவிங் போட்டியில் பங்கேற்கவும் 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் அமெரிக்காவுக்கு சென்றோம். நான் ஊரில் இல்லாததை பயன்படுத்தி என் மீது புகார்களையும், என் இமேஜை பாதிக்கும் வகையில் பேட்டியும் வனிதா கொடுத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து பத்து நாட்களுக்கு முன்பே வந்து விட்டேன். நான் ஊரில் இல்லை என்பதற்கான ஆதாரத்தையும், அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதற்கான ஆதாரத்தையும் போலீசிடம் கொடுத்து விட்டேன். அவர்களும் விசாரித்து சென்றிருக்கிறார்கள். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்கிறேன். என் மீது பொய்புகார் கொடுத்து, என் இமேஜை பாதிக்கும் வகையில் மீடியாவில் பேசி வரும் வனிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.

ஸ்கை டைவிங் போட்டி அனுபவம் எப்படி?

இந்த போட்டியில் நான் வெற்றி பெறவில்லை. ஆனால் பங்கேற்றதே பெருமையான விஷயம். இதில் கலந்து கொண்ட முதல் இந்தியன் நான்தான். 16 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து பத்திரமாக தரையிறங்குவது ஒவ்வொரு முறையும் மறு பிறப்பு எடுப்பது மாதிரியானதுதான். ஸ்கை டைவிங் அடிக்க லைசென்ஸ் எடுத்திருக்கும் முதல் நடிகனும் நான்தான். அடுத்து இதை எப்படி படத்தில் பயன்படுத்துவது என்கிற யோசனையில் இருக்கிறேன்.

ஆக்ஷன் ரூட்டை விட்டு விலகும் எண்ணம் இல்லையா?

அப்படி இல்லை. இப்போதைக்கு இந்த ரூட்தான் சரியாக இருக்கிறது. அடுத்த படத்துக்காக 6 மாதம் கடுமையாக உழைத்து சிக்ஸ் பேக் எடுத்திருக்கிறேன். ஆக்ஷன் படங்கள் எந்தக் காலத்திலும் விலைமதிப்புள்ள தங்கம் மாதிரி. இதில் முழு வெற்றி பெற்ற பிறகு அடுத்த கட்ட முயற்சிகள் பற்றி யோசிப்பேன்.

அடுத்த படம்…?

கவுதம் மேனன் உதவியாளர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கிறேன். இதுவரை இல்லாத வித்தியாசமான ஆக்ஷன் படம். த்ரில்லான விஷயங்களும் இருக்கும்.


Source: Dinakaran
 

Post a Comment