12/18/2010 10:27:34 AM
தமிழில், 'அறியான்' படத்தில் நடித்து வருபவர் கன்னட நடிகை ராகிணி திவிவேதி. இவர் நடித்துள்ள கன்னட படம் 'நாயகா' நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்காக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கன்னட சினிமா துறையை விட மலையாளம் தான் சிறப்பாக இருக்கிறது' என்று கூறியதாக, செய்திகள் வெளியானது. இதையடுத்து கன்னட சினிமாத்துறையினர் ராகிணிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
சில தயாரிப்பாளர்கள் அவரை படத்திலிருந்து நீக்கப்போவதாக கூறினார்களாம். விஷயம் பரபரப்பானதை அடுத்து ராகிணி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நான் சொன்ன செய்தி தவறாகப் புரியப்பட்டுள்ளது. அந்த சந்திப்பில் ஒரு பத்திரிகையாளர் மலையாளத்தில் நடிக்கிறீர்களே, அந்த அனுபவம் எப்படி இருக்கிறது எனக் கேட்டார். மலையாள சினிமா துறை நேர்மையாக இருக்கிறது என்றுதான் சொன்னேனே தவிர, கன்னடத்தையும் மலையாளத்தையும் ஒப்பிட்டு பேசவில்லை' என்று கூறியுள்ளார்.
Post a Comment