12/29/2010 12:24:06 PM
'யாவரும் நலம்', 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படங்களை அடுத்து, 'ஆதி பகவன்' படத்தில் நடித்து வரும் நீது சந்திரா கூறியது: 'ஆதிபகவன்' படத்துக்கு என்னை அமீர் தேர்வு செய்தபோதே தமிழ் கற்க வேண்டும் என்று கூறினார். அதில் இருக்கும் நியாயத்தை புரிந்துகொண்டு தமிழ் கற்கிறேன். ஷூட்டிங்கில் சுற்றிலும் தமிழ் தெரிந்தவர்கள் இருப்பதால் பிழைகளை உடனே திருத்தி விடுவார்கள். ஷெட்யூல் முடிந்ததால் அதில் கொஞ்சம் இடைவெளி. மீண்டும் ஷூட்டிங் தொடங்கியதும் முழுமையாக தமிழ் கற்றுவிடுவேன்.
சமீபத்தில் துபாயில் நடந்த விழா ஒன்றில் இந்தி பாடலுக்கு நடனம் ஆடினேன். பிறகு ரசிகர்களை சந்திக்க சென்றபோது என்னை சூழ்ந்துகொண்டார்கள். மனதுக்குள் திக் திக். ஆட்டோகிராப் கேட்பார்கள் என்று பார்த்தால் திடீரென்று, 'என்னை மணந்துகொள்கிறீர்களா? உங்களை நன்றாக வாழ வைப்பேன்' என்றார்கள். அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். அப்படிக்கேட்டவர்களில் பலர் மலையாளிகள், தமிழர்களாக இருந்தார்கள். அது என் மனதை நெகிழச் செய்தது. ஆனாலும், 'இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை' என்று சொல்லி நாசுக்காக நழுவிவிட்டேன்.
Post a Comment