12/9/2010 2:06:33 PM
யுத்தம் செய் படத்தில் நீது சந்திராவும், அமீரும் ஒரு குத்தாட்டம் போட்டனர். இதை தொடர்ந்து அமீர் இயக்கும் ‘ஆதிபகவான்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீது சந்திரா நடித்து வருகிறார். மேலும் விழா ஒன்றில் “எனக்குத் தெரிஞ்சு, இந்தப் பொண்ணு அளவுக்கு திறமையும், பணிவும் வேற யார்கிட்டயும் பார்க்க முடியல…” என்று சர்ட்டிபிகேட்டும் கொடுத்துள்ளார் அமீர். மேலும், படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக நிஜமாகவே சிகரெட் பிடிக்க வேண்டும் என்றாராம் அமீர். ஆனால் நீது சந்திராவோ, ‘நான் இதுவரை சிகரெட்டை தொட்டுப் பார்த்தது கூட கிடையாதே’ என நழுவ, ‘காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும். அப்புறம் உன்னிஷ்டம்’, என அமீர் கூற, கடைசியில் சிகரெட்டை ஸ்டைலாக பிடிப்பது எப்படி என்று அமீர் க்ளாஸ் எடுக்க, அந்தக் காட்சியை எடுத்து முடிப்பதற்குள் நீதுசந்திரா 28 சிகரெட்டுகளை ஊதித் தள்ளி அசத்தினாராம் நீது.
Post a Comment