12/20/2010 12:19:32 PM
'மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தப் பாடலை நீக்கமாட்டேன்' என்று கமல்ஹாசன் கூறினார். கமல், த்ரிஷா நடித்துள்ள படம் 'மன்மதன் அம்பு'. இதன் புரமோஷன் நிகழ்ச்சி கேரள மாநிலம் கொச்சியில் நேற்றுமுன்தினம் நடந்தது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், மலையாள விநியோகஸ்தர் கோகுலம் கோபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ரசிகர்கள் முன்னிலையில் கமல்ஹாசன் பேசியதாவது: 'மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டுமென சில அமைப்புகள் கூறிவருகிறது. ஆனால், சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த பாடலை நீக்க முடியாது. ரஜினியுடன் எனக்கு போட்டி இருப்பது உண்மைதான். அது ஆரோக்கியமான போட்டி. ரஜினிகாந்தின் படம் திரைக்கு வந்தால், அதற்கு சமமாக நானும் ஒரு படத்தை வெளியிட வேண்டும் என நினைக்கிறேன். மலையாள சினிமாவில் நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்.
Post a Comment