நிதி திரட்ட த்ரிஷாவின் காலண்டர்
12/21/2010 12:56:16 PM
பொது சேவையில் நடிகை நமீதா ஈடுப்பட்டு வருவது போல, நடிகை த்ரிஷாவும் பொது சேவை ஈடுபட தொடங்கியுள்ளாராம். தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய த்ரிஷா, கேன்சர் குழந்தைகளுக்காக நிதி திரட்ட முன்வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கேன்சர் குழந்தைகளுக்காக நிதி திரட்ட தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பில் த்ரிஷாவின் வெவ்வேறு போஸ்கள் அடங்கிய காலண்டர் வெளிவரவுள்ளதாம். அதில் கிடைக்கும் பணத்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறார் த்ரிஷா.
Source: Dinakaran
Post a Comment