12/24/2010 4:04:32 PM
ஹாலிவுட் பட நிறுவனம் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் 2 புதிய படங்களை தயாரிக்கிறார். இதில் ஒரு படத்தை அவரிடம் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்த சரவணன் இயக்குகிறார். இதற்கு இன்னும் பெயரிடவில்லை. இப்படத்தில் விமல், ஜெய் என இரு ஹீரோக்களும், அமலா பால், அஞ்சலியும் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில், இதில் நடிக்க விமல், அதிகமாக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. ஹீரோயின் அமலா பால் குறிப்பிட்ட தேதியில் கால்ஷீட் ஒதுக்கி தர முடியவில்லையாம். இதையடுத்து இருவரும் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். விமலுக்கு பதிலாக ஷரவனந்த், அமலா பாலுக்கு பதிலாக 'நாடோடிகள்Õ அனன்யா நடிக்கின்றனர்.
இது பற்றி அனன்யா கூறும்போது, 'சரவணன் இயக்கும் படத்தில் ஷரவனந்த் ஜோடியாக நடிக்கிறேன். நிறைய படங்கள் வந்தாலும் நல்ல சப்ஜெக்ட் இருந்தால்தான் ஒப்புக்கொள்கிறேன். இந்த ஆண்டு மலையாளத்தில் 4 படம் நடித்தேன். 2011ல் தமிழ், மலையாளத்தில் தலா 2 படம், இந்தியில் ஒரு படம் நடிக்கிறேன். தெலுங்கு படங்களிலிருந்தும் வாய்ப்பு வருகிறது. கால்ஷீட் இல்லாததால் ஒப்புக்கொள்ளவில்லைÕ என்றார்.
Post a Comment