12/9/2010 12:59:34 PM
காஞ்சிவரம் படத்தில் அறிமுகமான ஷம்மு ஓரினச் சேர்க்கை பற்றி கருத்து கூறியதில் மிகுந்த சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய நடிகை ஷம்மு ‘ஓரின சேர்க்கை குற்றமல்ல. அது தனிப்பட்டவரின் சொந்த விஷயம். உச்ச நீதிமன்றமே சாதகமான தீர்ப்பு கூறியுள்ளது. உலக நாடுகளிலும் அங்கீகரித்து உள்ளன. இதில் நாம் யார் எதிர்க்க,’ என்று பேசியதாக தெரிகிறது.
ஷம்முவின் இந்த கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. அதன் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரினச் சேர்க்கை சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியது. இயற்கைக்கு மாறானது. குடும்ப வாழ்க்கையை சிதைக்க கூடியது. அதனை நடிகை ஷம்மு ஆதரித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் ஷம்மு வெளிப்படையாக இதனை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்…,” என்று அவர் கூறியுள்ளார்.
Post a Comment