12/29/2010 11:33:09 AM
மாதேஷ் இயக்கும் 'தில்லு முல்லு' படத்தில் நடிக்கிறார் வினய். இதுபற்றி அவர் கூறியதாவது: 'மோதி விளையாடு' படத்துக்கு பிறகு 'டேம் 999' என்ற ஆங்கிலப் படத்தில் நடித்தேன். இதில் விமலா ராமனும் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இந்த படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட இருக்கிறார்கள். இதையடுத்து மாதேஷ் இயக்கும் 'தில்லுமுல்லு' படத்தில் நடிக்கிறேன். இந்த படம் பற்றி இப்போது பேச வேண்டாம் என்று இயக்குனர் சொல்லியிருக்கிறார். அதனால் அந்த கேரக்டர் சஸ்பென்ஸ். தெலுங்கில் 'வீலே' என்ற படத்தில் நடித்து வருகிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்தாலும் தமிழில் நடிப்பதே சவுகர்யமாக இருக்கிறது. இவ்வாறு வினய் கூறினார்.
Post a Comment