ரஜினி முன்னிலையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினி முன்னிலையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி

12/21/2010 1:01:35 PM

நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் 4 மாநில சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி பட கலைஞர்களும் பங்கேற்கும் செல¤ப்ரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) போட்டி வரும் ஜனவரி மாதம் 22, 23, 29, 30 ஆகிய 4 நாட்கள் நடக்க உள்ளது. தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் டீமுக்கு 'சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்Õ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீமின் ஐகான் வீரர்களாக விஜய், சூர்யா இருப்பார்கள். அவர்களிடம் இது தொடர்பாக பேச்சு நடக்கிறது.

சிம்பு, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ், ராதாரவி, ஷாம், அப்பாஸ், ஜெய், அம்சவர்தன், ரமணா, விக்ராந்த், ஜீவா, ஆர்யா, மாதவன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர். நானும் பங்கேற்கிறேன். ரஜினிகாந்த் முன்னிலையில் இப்போட்டி நடக்கிறது. தெலுங்கு டீமில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, என்.டி.பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர்., இந்தி டீமில் சல்மான் கான், சுனில் ஷெட்டி அணி, கன்னடத்தில் சுதீப், புனித் ராஜ்குமார் அணி பங்கேற்கின்றன. இது பொழுதுபோக்காக இருந்தாலும் கிரிக்கெட் விதிகளின்படி ஆட்டம் நடைபெறும். ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் இப்போட்டி நடக்கும். சென்னையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுவதால், இங்கு ஆட்டம் நடத்துவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். போட்டிக்கென பிரத்யேக கோப்பை, ஒவ்வொரு அணிக்கும் வெவ்வேறு கலரில் ஆடை ஆகியவை தயாராகிறது. ராடன் மீடியா, ஸ்பிரின்ட் அண்ட் ரிதம் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இவ்வாறு சரத்குமார் கூறினார்.


Source: Dinakaran
 

Post a Comment