12/17/2010 1:54:24 PM
பொதுவாக தமிழ் படத்தில் வரும் அமெரிக்க மாப்பிளை கதாபாத்திரத்தில் இவரை அதிகம் பார்க்கலாம். அப்படி வரும் இவர் பட கடைசியில் தனக்கு நிச்சயமான பெண்ணை ஹீரோவிடம் சேர்த்து வைத்து மீண்டும் சென்றுவிடுவார். இதற்கு அவர் நடித்த ‘அலைபாயுதே’, ‘கண்ட நாள் முதல்’ ‘யாராடி நீ மோகினி’ படங்களே சான்று. ஆனால் சமீபத்தில் கார்த்திக் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும், இனி அமெரிக்க மாப்பிளை கதாபாத்திரம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம் கார்த்திக். அதுமட்டுமின்றி இனி நான் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று கூறிய அவர், தற்போது கவுதம் மேனன் தயாரிக்கும் Ôவெப்பம்Õ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ‘வெப்பம்’ தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என அவர் நம்பி வருகிறார்.
Post a Comment