12/10/2010 3:03:20 PM
''கார்த்தியை காதலிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை'' என்றார் தமன்னா. ‘பையா’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார் தமன்னா. இதையடுத்து இப்போது மீண்டும் கார்த்தியுடன் சிறுத்தை படத்தில் நடித்து வருகிறார். இருவரும் காதலிப்பதாகவும் தன்னுடன் நடிக்க தமன்னா பெயரை கார்த்தி சிபாரிசு செய்வதாகவும் கோடம்பாக்கத்தில் கிசு.. கிசு வெளியாகின. இதுபற்றி தமன்னாவிடம் கேட்ட போது என்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாக பழகுவேன். கார்த்தியுடனும் அப்படித்தான் பழகினேன். எனக்கும், கார்த்திக்கும் காதல் இல்லை என்று பலமுறை மறுத்து விட்டேன். ஆனாலும் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்படுகிறது. என்னையும், கார்த்தியையும் இணைத்து பேசுவதே முட்டாள்தனம். அவரோடு இரண்டு படம் நடிச்சிட்டா, காதல் வந்துடுமா… உடன் நடிக்கும் ஒரு நடிகர் அவர். அவ்வளவுதான். வேற எந்த உணர்வும் இல்லை. தயவு செய்து இதை எழுதுங்கள். இப்போதைக்கு சினிமாவில் கவனம் செலுத்துவது மட்டுமே எனது முதல் வேலை என்று கூறினார்.
Post a Comment