முன்னணி இயக்குனராக வளர்ந்து வரும் கே.வி!
12/28/2010 12:43:43 PM
இப்படி தனக்குள் ஹைடெக் கமர்ஷியலை வைத்திருக்கும் கே.வி.ஆனந்த்தின் ‘கோ’ படத்தின் டிரெய்லர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ‘கோ’ படத்தில் பத்திரிகை புகைப்படக்காரரான ஜீவா, ஆட்சியாளர்களின் அட்டகாசங்களை கண்டுபிடித்து, போட்டோவுடன் எழுதுகிறார். அரசியல்வாதிகள் ஜீவாவுக்கு குறி வைக்கிறார்கள். அப்புறம் என்ன என்பது மீதிக் கதையாம். அரசியல்வாதியாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. முன்னதாக கே.வி. ஆனந்த், பத்திரிகை புகைப்படக்காரராக வேலை பார்த்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.
12/28/2010 12:43:43 PM
ஆள் பார்பதற்கு குள்ளம் தான், ஆனால் அவர் எடுத்த படங்களை பார்த்தால், வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் அவரது பெயரும் இடம் பிடிக்கிறது என்பது தான் உண்மை. கனா கண்டடேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய கே.வி.ஆனந்த், தன்னுடைய முதல் படத்திலேயே வித்தியசமான கதை, சுவாரசியமாக திரைக்கதை அமைத்து அனைவரது பாராட்டினை பெற்றார். பிறகு சூர்யாவை வைத்து அயன் படத்தை இயக்கினார். பக்க கமர்ஷியல் கதையை பிரம்மாண்டமாக அமைத்து விறுவிறுப்பை கூட்டி பட்டிதொட்டி முதல் சிட்டி வரை படம் மெகா ஹிட்டானது.
இதனையடுத்து, ஜீவா, கார்த்திகா ஜோடியாக நடிக்கும் படம் "கோ". கே.வி.ஆனந்த் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் நிறைய மெகா ஸ்டார் ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளார் கே.வி.ஆனந்த். சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, தமன்னா என 15 ஸ்டார்களை கெஸ்ட் ரோலில் ஆட வைத்துள்ளார். இவ்வளவு முன்னணி நடிகர்களும்-நடிகைகளும் ஒன்று சேர்த்து ஆட வைப்பது தமிழ் சினிமா திரையுலகில் சிரமம் தான் என்றாலும், கே.வி.ஆனந்த இந்த காரியத்தை சுலபமாக முடித்துள்ளார். இப்படி தனக்குள் ஹைடெக் கமர்ஷியலை வைத்திருக்கும் கே.வி.ஆனந்த்தின் ‘கோ’ படத்தின் டிரெய்லர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ‘கோ’ படத்தில் பத்திரிகை புகைப்படக்காரரான ஜீவா, ஆட்சியாளர்களின் அட்டகாசங்களை கண்டுபிடித்து, போட்டோவுடன் எழுதுகிறார். அரசியல்வாதிகள் ஜீவாவுக்கு குறி வைக்கிறார்கள். அப்புறம் என்ன என்பது மீதிக் கதையாம். அரசியல்வாதியாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. முன்னதாக கே.வி. ஆனந்த், பத்திரிகை புகைப்படக்காரராக வேலை பார்த்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.
Source: Dinakaran
Post a Comment