மன்மதன் அம்பு படத்தில் சூர்யா கெஸ்ட் ரோல்
12/10/2010 3:38:25 PM
12/10/2010 3:38:25 PM
மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் சிறப்புத்தோற்றம் இருந்து அழைத்தால், ஈகோ பார்க்காமல் சூர்யா ஒப்புக் கொள்கிறார். ஒருநாள் ஷூட்டிங் என்றாலும் ஒத்துழைப்பு தருகிறாராம். ஏற்கனவே ஜோதிகாவுடன் 'ஜூன் ஆர்' படத்தில் ஒரு காட்சியில் நடித்த அவர், ரஜினியின் 'குசேலன்' படத்திலும் வந்தார். இப்போது கமல்ஹாசனின் 'மன்மதன் அம்பு', ஜீவா நடிக்கும் 'கோ', பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷாலுடன் 'அவன் இவன்' ஆகிய படங்களிலும் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். 'இது, என் நண்பர்களுக்காக நான் தரும் ஒத்துழைப்பு' என்கிறார் சூர்யா.
Source: Dinakaran
Post a Comment