12/1/2010 11:05:13 AM
பாண்டியராஜன் நடிக்கும் காமெடி தொடரான, 'மாமா மாப்ளே' சன்.டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. பாண்டியராஜன் முதன்முதலாக நடிக்கும் டி.வி. தொடர், 'மாமா மாப்ளே'. விஷன் டைம் சார்பில் வைதேகி ராமமூர்த்தி தயாரிக்கிறார். இத்தொடர் சன் டி.வி.யில் வரும் 5&ம் தேதி முதல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் இயக்குகிறார். பாண்டியராஜன் மாப்பிள்ளையாகவும் அவர் ஜோடியாக ஐஸ்வர்யாவும், மோகன்ராம் மாமனாராகவும் அவருக்கு ஜோடியாக கல்பனாவும் நடிக்கின்றனர். மேலும் பாலாஜி, குமரேசன், ஷோபனா, நெல்லை சிவா, மதுமிதா உட்பட பலர் நடிக்கின்றனர். திரைக்கதை, வசனம் எம்.ரவிக்குமார், பழனி. அசோக்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யா இசை அமைக்கிறார். 'காமெடியை மையமாக வைத்து இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக எல்லாரையும் சிரிக்க வைக்கும் விதமாக இத்தொடர் இருக்கும்' என்றார் இயக்குனர் சக்திவேல்.
Post a Comment