12/17/2010 12:58:08 PM
பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனமான டுவென்டீத் ஃபாக்ஸ், இந்தியாவில் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா என்ற பெயரில் இந்திப் படங்களை தயாரித்தும், ஆங்கிலப் படங்களை விநியோகித்தும் வருகிறது. தற்போது இந்நிறுவனம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து தமிழ் படங்களை தயாரிக்க உள்ளது. முன்னதாக இது தொடர்பாக அறிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இதுபற்றி முருகதாஸ் கூறும்போது, இந்தி படம் இயக்கச் சொல்லி ஃபாக்ஸ் நிறுவனத்தார் கேட்டிருந்தனர். தமிழ் படம் இயக்கும் முடிவில் இருந்ததால் அதனை செய்ய முடியவில்லை. அதன் பின் தமிழ் படங்களை தயாரித்து தர முடியுமா என்று கேட்டபோது ஒப்புக் கொண்டேன். எனது நிறுவனத்துக்கு ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் என பெயர் வைத்துள்ளேன். முதலில் சிறிய பட்ஜெட் படங்களையும் பின் பெரிய படங்களையும் தயாரிப்போம். இதில் முதலாவதாக எனது உதவியாளர் சரவணன் இயக்கும் படத்தில் விமல், ஜெய் ஹீரோவாக நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார் என்றார். படத்தில் ஹீரோயினாக ‘மைனா’ புகழ் அமலா பால் நடிக்கிறார்.
Post a Comment