12/27/2010 11:46:12 AM
நல்ல கதைகளை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. கதை தேர்வில் எனது மதிப்பீடு குழப்பமாக இருக்கிறது என்றார் ஸ்ரேயா. இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கில் சில தோல்வி படங்களில் நடித்திருக்கிறேன். அதில் என் நடிப்பை குறை சொல்ல முடியாது. நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதில் நான் குழம்புகிறேன். கதைகள் பற்றிய என் மதிப்பீடு தவறாகி விடுகிறது. ஆனால், அதற்காக நான் வருத்தப்படுகிறேன் என்று அர்த்தமில்லை. அசோக் அமிர்தராஜ் தயாரித்த 'தி அதர் என்ட் ஆஃப் லைஃப்' என்ற ஹாலிவுட் படத்தில் ஜெஸ் மெட்காஃபுடன் நடித்தேன். ஹாலிவுட் படங்களில் நடிப்பது சிறப்பான அனுபவமாக இருக்கிறது. ஷூட்டிங் தொடங்கும் முன் ரிகர்சல் நடத்துகிறார்கள். பிறகு கதையை வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதுதான் வசனம், இதுதான் காட்சி என்று முதலில் முடிவாகிவிட்டால், அதன் பிறகு ஸ்பாட்டில் ஒரு வரியை கூட மாற்றுவதில்லை. ஆனால் இங்கு கதையை விட விஷூவலுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பதாக நினைக்கிறேன். அடுத்து, தீபா மேத்தா இயக்கும் 'மிட்நைட் சில்ரன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறேன். இது சல்மான் ருஷ்டியின் நாவலை மையப்படுத்திய கதை. தமிழில், ஜீவாவுடன் 'ரவுத்திரம்' இருக்கிறது. தெலுங்கில் நல்ல கதைகளை எதிர்பார்த்திருக்கிறேன்.
Post a Comment