12/21/2010 12:58:51 PM
'முதல் காதல் மழைÕ பட ஹீரோயின் சுவாதிகா கூறியது: இப்படத்தில் லலிதா என்ற வேடத்தில் நடிக்கிறேன். ஹீரோ மகேந்திரனுக்கு சமமாக நடிக்க வாய்புள்ள வேடம். 'லலிதா காலனிÕ என்றுதான் இதற்கு முதலில் பெயரிடப்பட்டது. காலனி என்பது ஆங்கில வார்த்தையாக இருந்ததால் பிறகு 'முதல் காதல் மழைÕ என மாற்றப்பட்டது. நிலப் பிரச்னை காரணமாக இரண்டு குடும்பங்களுக்கிடையே ஏற்படும் மோதல்தான் கதை. மதுவண்ணன் இயக்குகிறார். கன்னடத்தில் 'பல்லவி இல்லத சரணாÕ என்ற படத்தில் நடித்தேன். பெயர் கிடைத்தது. ஹீரோயின்கள் கிளாமர் காட்டினால்தான் ஜெயிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கிளாமராக நடித்தால் சில நாட்கள் பரபரப்பாக பேசப்படலாம். நடிப்புதான் நிலையான பெயரைத் தரும். அதற்காக கிளாமர் வேடத்தில் நடிக்க மாட்டேன் என்பதில்லை. கிளாமருடன் நடிப்பும் கலந்து பாத்திரங்களை விரும்புகிறேன். பிரச்னையாக பேசப்படும் வேடங்கள் நிறைய உண்டு. அதுபோன்ற வில்லங்க வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். பிரபு சாலமன் போன்ற இயக்குனர்களை நம்பி இது போன்ற வேடங்களில் நடிக்கலாம்.
Post a Comment