பிக்பாக்கெட் திருடனாக நடிக்கும் கார்த்தி
12/23/2010 2:13:42 PM
தெலுங்கில் ஹிட்டான 'விக்ரமார்க்குடு' படம் தமிழில் 'சிறுத்தை' என ரீமேக் ஆகிறது. ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ ஸ்கிரீன் தயாரிக்கும் இந்த படத்தில், கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவர் ஜோடி, தமன்னா. சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ‘சிறுத்தை’ படத்தில் பிக்பாக்கெட் திருடனாக கார்த்தி, சந்தானம் நடிக்கின்றனர். மற்றொரு வேடத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கிறார். பிக்பாக்கெட் கதாபாத்திரத்தில் வரும் கார்த்தி, சந்தானம் காம்பினேஷன் செம காமெடியாக அமைத்துள்ளதாக சிறுத்தை படத்தின் இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.
Source: Dinakaran
Post a Comment