என்னைத் தொலைக்க விரும்பவில்லை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

என்னைத் தொலைக்க விரும்பவில்லை

12/18/2010 10:14:35 AM

'சிக்கு புக்கு'படத்தில் ப்ளாஷ்பேக் காட்சியில் ஆர்யா காதலியாக நடித்தவர் ப்ரீத்திகா ராவ். இந்தி நடிகை அம்ரிதா ராவின் தங்கை. அவர் கூறியதாவது:
ஆங்கில நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் பத்தி எழுதிக்கொண்டிருந்தேன். சில விளம்பரங்களிலும் நடித்தேன். அதைப் பார்த்து 'சிக்குபுக்கு' வாய்ப்புக் கிடைத்தது. இதில் செட்டி நாட்டு பெண்ணாக நடித்தேன். இதற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். படம் ரிலீசான அன்று பேஸ்புக்கில் ரசிகர்களிடம் பேசினேன்.

இரண்டே நாளில், மலேசியா, ஜெர்மன், இலங்கை, அமெரிக்கா உட்பட பல்வேறு நாட்டு 1256 ரசிகர்கள் பேஸ்புக்கில் இணைந்தனர். தமிழ் படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். எனது முதல் படத்திலேயே இவ்வளவு ரசிகர்கள் என்னை பாராட்டியது மறக்க முடியாத அனுபவம். தொடர்ந்து சிறந்த வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். ஓவர் கிளாமராக நடித்து என்னை நான் தொலைக்க விரும்பவில்லை. எனது அக்கா அம்ரிதா, நடிப்புக்கு ஏதாவது டிப்ஸ் கொடுத்தாரா என கேட்கிறார்கள். நான் நடிக்க முடிவானதுமே அவள் என்னிடம் இருந்து பிரிந்துவிட்டாள். அவளது நடிப்பு சாயல் எதுவும் எனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்கான பிரிவு அது. கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் சில கதைகள் கேட்டுள்ளேன். இந்தியில் நடிப்பீர்களா என்கிறார்கள். நான் அதை தேடிச் செல்லவில்லை. வந்தால் ஏற்பேன்.


Source: Dinakaran
 

Post a Comment