அம்மாவாக நடிப்பது நல்ல அனுபவம்தான்
12/18/2010 10:23:51 AM
நூறு படங்களை தாண்டிவிட்டார் சரண்யா. இதுபற்றி அவர் கூறியதாவது: 'நாயகன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானேன். பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், மிகச் சிறிய வயதிலேயே கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினேன். இதுவரை 50&க்கும் மேற்பட்ட படங்களில் அம்மாவாக நடித்துவிட்டேன். தொடர்ந்து அம்மாவாக நடிப்பது நல்ல அனுபவமாகத்தான் இருக்கிறது. நான் நடித்து வெளிவர இருக்கும் 'தென்மேற்கு பருவக்காற்று' எனக்கு 100&வது படம். இது பெரிய புகழை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் நடிப்பதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு பயிற்சி எடுத்தேன். மென்மையான தாயாக நடித்து பழகியிருந்த நான், இதில் வன்மையான தாயாக நடித்திருக்கிறேன்.
Source: Dinakaran
Post a Comment