12/20/2010 12:28:13 PM
'அரிது அரிது' படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஹரீஷ் கல்யாண், நிருபர்களிடம் கூறியதாவது: 'சிந்து சமவெளி'யை தொடர்ந்து நான் நடித்துள்ள 'அரிது அரிது' படம், சில தினங்களில் ரிலீசாகிறது. படம் முழுவதும் வசனம் பேசாமல், வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளேன். இதற்காக, 4 மாதங்கள் நடிப்புப் பயிற்சி பெற்றேன். டைரக்டர் கே.ஆர்.மதிவாணன் உருவாக்கிய என் வேடம், தமிழ் சினிமாவுக்கே புதிதாக இருக்கும். என் வாழ்க்கையில் சம்பந்தப்படாத சிலர், என்னைச் சுற்றி வந்து பிரச்னை செய்வார்கள். அது என்ன என்பது சஸ்பென்ஸ். அடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும், 'சட்டப்படி குற்றம்' படத்தில் நடிக்கிறேன். இதில் சத்யராஜ், விக்ராந்த் நடிக்கிறார்கள். பிறகு பாலாஜி சக்திவேல் உதவியாளர் தாயுமானவன் இயக்கத்தில் நடிக்கிறேன்.
Post a Comment