போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்
12/23/2010 2:25:25 PM
சென்னையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த ஐஸ்வர்யா ராய், சென்னை விமான நிலையத்தில் தன்னுடைய சூட்கேஸ் தொலைத்து விட்டாராம். இதனால் மிகவும் அப்செட் ஆன ஐஸ், நிகழ்ச்சி அமைப்பாளருக்கு போன் செய்தார். மேலும் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவிப்புக்குள்ளானார் ஐஸ். சூட்கேஷில் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்வதற்கான விசேஷ உடை இருந்ததாம். நிகழ்ச்சி அமைப்பாளரும் அவசரம் அவசரமாக ஒரு புதிய டிசைனர் டிரஸ்ஸையும், அதற்கேற்ற ஷூவையும் தயார் செய்து ஐஸ்வர்யாவிடம் வழங்கி நிலைமையை சமாளித்தனர். அவசரம் அவசரமாக கிடைத்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வந்தாலும், படு அட்டகாசமான அழகுடன் காட்சி அளித்தார் ஐஸ்வர்யா.
Source: Dinakaran
Post a Comment