சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படத்தை இயக்க ஒரு போட்டியே நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு இயக்குநரின் படத்தில் நடிக்க சூப்பர் ரஜினிகாந்த் காத்துக் கொண்டியிருக்கிறார். அப்படி ரஜினியை ஏங்க வைத்த அந்த இயக்குனர் யார் தெரியுமா. பிரபல இயக்குநர் கே விஸ்வநாத். சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்தவர் இயக்குநர் கே விஸ்வநாத். தமிழில் கமல்ஹாஸனை வைத்து அதிக படங்களை எடுத்த கே விஸ்வநாத், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையவில்லை.
சமீபத்தில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் ரஜினிகாந்தும், விஸ்வநாத்தும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரஜினி, கே. விஸ்வநாத் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது என்று கூறினார். இதுபற்றி ரஜினி கூறுகையில், சாகரசங்கமம் அவருடைய மெகா ஹிட் படத்திற்கு பிறகு, நான் நடிக்கவேண்டும் என்று விஸ்வநாத் கேட்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன். ஆனால் எனக்கு வேறு சில படங்கள் இருந்தன. அவற்றை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் விஸ்வநாத் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு அந்த படமும் எடுக்கப்படாமலேயே நின்றுவிட்டது.விஸ்வநாத் படத்தில் நான் நடித்திருந்தால் அவர் என்னை வேறு பரிமாணத்தில் காட்டியிருப்பார். என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருந்திருக்கும்…” என்றார் ரஜினி.
ரஜினி விருப்பம் பற்றி விஸ்வநாத்திடம் கேட்ட போது, ரஜினியை வைத்து படம் எடுக்க இப்போது கூட காலம் கடந்து விடவில்லை, என்றார்.
ரஜினியின் இந்த ஆசை நிறைவேறுமா என்பதை பொருத்திருந்ததான் பார்க்க வேண்டும்…
நிறைவேறுமா ரஜினியின் ஆசை?
Source: Dinakaran
Post a Comment