12/29/2010 12:25:24 PM
புதுமுகங்கள் சேகர், காயத்ரி நடிக்கும் படம் 'ஆசைப்படுகிறேன்'. இதன் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் டைரக்டர் ஜனநாதன் பேசியது: இதில் நடிக்கும் ஹீரோயின் காயத்ரி விளையாட்டு வீரர். உடற்தகுதியுடன் இருக்கிறார். ஹீரோயினுக்கு ஆரோக்கியம்தான் அழகு. படத்தின் முதல் காப்பி எடுத்து விநியோகஸ்தர், தியேட்டர்காரர்களிடம் கொடுத்துவிட்டால் அதை ஓடவைத்துவிடுவார்கள் என்ற காலம் மலை ஏறிவிட்டது. அப்போது 100 நாள், ஒரு வருடம், 5 வருடம் என படங்கள் ஓடின.
அன்று வேறு பொழுதுபோக்கும் இல்லை. இப்போது ஏராளமான வசதிகள் இருக்கிறது. படம் வெளியான பிறகும் வெற்றிக்கான முயற்சிகள் தொடர வேண்டும். மிகச் சிறந்த படங்கள் கூட ஓபனிங் இல்லாமல் டல்லடிக்கிறது. முதல்காட்சிக்கு 20 பேர் வருகிற நிலை இருக்கிறது. அவர்கள் பார்த்து நன்றாக இருக்கிறது என்று சொன்னால்தான் பிறகு கூட்டம் வருகிறது. அதற்குள் படத்தை எடுத்துவிடுகிறார்கள். இந்நிலையை மாற்றும் பொறுப்பு நட்சத்திரங்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது. 'ஆசைப்படுகிறேன்' பட இயக்குனர் பாலு மணிவண்ணன் 'தூரத்து இடிமுழக்கம்' காலத்திலிருந்து உதவியாளராக இருக்கிறார். 'பாரதி', 'பெரியார்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர். நல்ல சினிமா தரும் நோக்கில் இதை இயக்கி இருக்கிறார்.
Post a Comment