12/28/2010 11:56:33 AM
களவாணி படத்தின் நாயகன் விமல், அந்தப் பட பாணியிலேயே தனது காதலியை ரகசியமாய் திருமணம் செய்தார். சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் டைரக்டு செய்த ‘பசங்க’ படத்தில் அறிமுகமானவர், விமல். இதற்கடுத்து விமல் நடித்து வெளிவந்த படம் களவாணி. இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்று அது, இப்போது களவாணி படத்தை தயாரித்த நசீர் அடுத்து, எத்தன் என்ற படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்திலும் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது. விமலுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த அட்சயா என்ற பிரியதர்சினிக்கும் காதல் இருந்து வந்தது. பிரியதர்சினி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
விமல்-பிரியதர்சினி காதலை, பிரியதர்சினியின் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விமல்-பிரியதர்சினி இருவரும் ரகசிய திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, பிரியதர்சினி சென்னையில் இருந்து கும்பகோணம் சென்றார். கும்பகோணத்தில் தங்கியிருந்த விமலைச் சந்தித்தார். இருவரும் சுவாமிமலை சென்று அங்குள்ள முருகன் கோவிலில், ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்குப்பின், பிரியதர்சினியை பழையபடி கல்லூரிக்கு அனுப்பிவிட்ட விமல், கும்பகோணத்தில் தங்கி எத்தன் படப்பிடிப்பை தொடர்கிறார்.
இந்த திருமணம் குறித்து விமல் கூறுகையில், “என் சொந்த ஊர், மணப்பாறை. பிரியதர்சினியின் சொந்த ஊர், திண்டுக்கல். இருவரும் உறவினர்கள். அவள், என் அப்பா வழியில் எனக்கு மாமா மகள். சின்ன வயதில் இருந்தே எங்களுக்குள் நட்பு இருந்து வந்தது. எங்கள் நட்பு, காதலாக மலர்ந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக இரண்டு பேரும் காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினோம். ஆனால், எங்கள் காதலை பிரியதர்சினியின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவளை ஒரு டாக்டர் மாப்பிள்ளைக்குத்தான் கொடுப்போம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். சினிமாவில் நான் நல்ல நிலைமையில்தான் இருக்கிறேன். எதிர்காலத்தில் முன்னணி நடிகராக வருவேன். உங்கள் மகளை நல்லபடியாக வைத்து காப்பாற்றுவேன் என்று மாமனார் குடும்பத்தினருடன் போராடினேன். “சினிமாக்காரனுக்கு எங்கள் பெண்ணை கொடுக்க மாட்டோம்” என்று கூறி விட்டார்கள். அதோடு நிற்காமல், பிரியதர்சினிக்கு தீவிரமாக டாக்டர் மாப்பிள்ளையை தேட ஆரம்பித்தார்கள். எனவேதான் நாங்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். இரண்டு பேர் குடும்பத்து பெரியவர்கள் சம்மதத்துடன், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து இருக்கிறோம்…,” என்றார்.
+ comments + 1 comments
பட பாணியிலேயே தனது காதலியை ரகசியமாய் திருமணம் செய்தார்
இதையும் படிச்சி பாருங்க
ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்
Post a Comment