12/22/2010 1:45:10 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
காதல் நடிகரும் காட்டன் வீர ஹீரோயினும் நடிச்ச முருகர்பேரு கொண்ட படம், ஒரு வருஷத்துக்கு முன்னால தமிழ்ல ரிலீஸாயி புஸ்ஸாச்சு. அப்பவே தெலுங்குலயும் ரெடியா இருந்த இந்த படத்தை கப்சிப்ன்னு கிடப்புல போட்டுட்டாங்க… போட்டுட்டாங்க… இப்போ காட்டன் வீர ஹீரோயினுக்கு தெலுங்குல படங்கள் வருது. அதே சூட்டோடு அந்த படத்தையும் தூசி தட்டி ரிலீஸ் செய்றதுக்கு ரெடி பண்றாங்களாம்… பண்றாங்களாம்…
பஞ்ச் நடிகரோட சொந¢தக்கார நடிகரை கண்டுக்காம இருந்தாரு பஞ்ச்சோட அப்பா இயக்கம். அதுக்கு குடும்ப பிரச்னைதான் காரணமாம்… காரணமாம்… இப்போ பிரச்னை தீர்ந்ததால சொந்தக்கார நடிகரை வச்சு படம் இயக்குறாராம்… இயக்குறாராம்…
இந்தியில டாப்புக்கு வரலாமுங்கிற மூணுஷாவோட கனவு தகர்ந்து போயிடுச்சு. ஆனாலும் நடிகை அடிக்கடி மும்பைக்கு படையெடுக்கிறாராம்… படையெடுக்கிறாராம்… காரணம், அங்கேயும் ரியல் எஸ்டேட்ல நடிகை மும்முரமா ஈடுபட்டிருக்கிறாராம்… ஈடுபட்டிருக்க¤றாராம்…
Post a Comment