காவலன் டிரெய்லரை அமெரிக்காவில் வெளியிட்ட விஜய்
12/17/2010 4:07:32 PM
சமீபத்தில் தமிழ் படத்தின் பாடல்கள் வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நமது இளைய தளபதி ஒரு படி முன்னேறி காவலன் படத்தின் டிரெய்லரை அமெரிக்காவில் இன்று வெளியிடுகிறார். காவலன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இப்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் நடிகர் விஜய். விஜய் படத்துக்கு அமெரிக்காவில் ட்ரெயிலர் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது காவலன்.
Source: Dinakaran
Post a Comment