இசைப்புயல் மீண்டும் ஆஸ்கார் விருதை பெறுவாரா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இசைப்புயல் மீண்டும் ஆஸ்கார் விருதை பெறுவாரா?

12/17/2010 12:25:25 PM

2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக 2 ஆஸ்கார் விருதுகளைப் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு மீண்டும் ஆஸ்கார் விருது பெற வாய்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான ’127 ஹவர்ஸ்’ படத்தில் இசையமைத்தார் ஏ.ஆர்.ரகுமான், அதில் இடம்பெறும் ‘If i Rise’ என்ற பாடலுக்காக இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெற வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் 41 பாடல்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஏ.ஆர்.ரகுமானின் ’127 ஹவர்ஸ்’ பாடலும் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 41 பாடவ்களிலிருந்து 6 பாடல் பரிந்துரை செய்யப்படும். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும அந்த 6 பாடல்கள் வருகிற ஜனவரி மாதம் 6ந் தேதி அறிவிக்கப்படும். இதை பொறுத்தே ரகுமானுக்கு இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை கிடைக்குமா என்பது தெரிய வரும். முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த ஆண்டுக்கான ‘கோல்டன் கோளப்’ விருது அதே பாடலுக்குக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.


Source: Dinakaran
 

Post a Comment