முதல் காதல் மழை பாடல் வெளியீடு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முதல் காதல் மழை பாடல் வெளியீடு

12/20/2010 12:38:51 PM

மாருதி குளோபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி.என்.மிஸ்ரா தயாரித்துள்ள படம் 'முதல் காதல் மழை'. மாஸ்டர் மகேந்திரன் ஹீரோ. சுவாதிகா ஹீரோயின். மதுவண்ணன் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படம் பற்றி தயாரிப்பாளர் மிஸ்ரா கூறியதாவது: இது சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள காதல் கதை. கான்ட்ராக்டருக்கும், தர்மகத்தாவிற்கும் கோவில் நில பிரச்னையில் தகராறு வருகிறது. இருவரின் பிள்ளைகளும் காதலிக்கிறார்கள். பெரியவர்கள் பிரச்னையை, காதல் எப்படி தீர்க்கிறது என்பது கதை. சாணக்யாவின் இசையில் 6 பாடல்கள் இடம்பெறுகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ஆஞ்சநேயர் பற்றிய பாடல் பேசப்படும். பிப்ரவரி மாதம் ரிலீசாகிறது.


Source: Dinakaran
 

Post a Comment