டி.ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தலைக்காதல்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டி.ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தலைக்காதல்
1/3/2011 2:57:31 PM
டி.ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தலைக்காதல் படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனராம். வழக்கமாக குத்துப் பாட்டுக்களை நிறையக் கொடுக்கும் ராஜேந்தர் இந்தப் படத்தில் தெம்மாங்குப் பாட்டையும் கலந்து கொடுத்து ரசிகர்களை கலக்கப் போகிறாராம். அடுத்த மாதம் இறுதியில் ஒரு தலைக்காதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த மாதம் இறுதியில் ஒரு தலைக்காதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இந்தபடத்தில் மும்பையை சேர்ந்த 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் குத்துப்பாட்டு மட்டும் அல்லாமல் தெம்மாங்கு பாட்டும் இடம்பெறும்.
ஒருதலை ராகம் படம் போல இந்த ஒருதலைக்காதல் படமும் மாபெரும் வெற்றி பெறும். இதன் படப்பிடிப்பு கொல்லிமலை, திண்டுக்கல், தேனி போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறும். இந்த படம் முடிந்த பிறகு குரளரசனை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு படம் எடுக்க உள்ளேன். வருகிற தேர்தலில் எந்த கட்சி எங்கள் ஆதரவை கேட்கிறதோ அந்த கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம். எங்களுக்கு கூட்டணி முக்கியம் அல்ல. கொள்கை தான் முக்கியம் என்றார்.
மேலும் பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டில் லதிமுகவின் பொதுக் கூட்டத்தை பிரமாண்ட மாநாடு போல நடத்தப் போகிறாராம் ராஜேந்தர். இதையும் அவரே தெரிவித்தார்.


Source: Dinakaran
 

Post a Comment