கல்யாணம் வேண்டாம்-நீத்து
1/6/2011 11:02:40 AM
1/6/2011 11:02:40 AM
இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணம் நீத்து சந்திராவிடம் இல்லையாம். இந்திக்கார நீத்து சந்திரா, நான் கடவுள் படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்க வேண்டியவர். இருப்பினும் யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த அவருக்கு தீராத விளையாட்டுப் பிள்ளை பெரும் அந்தஸ்தைக் கொடுத்தது. தற்போது ஆதி பகவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டாலும் கூட தமிழ் இன்னும் நீத்துவுக்கு கைகூடவில்லையாம். படப்பிடிப்புக்கு இடை இடையே தமிழ் கற்பது சிரமமாக இருந்ததால் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரே மூச்சாக தமிழ் கற்கப் போகிறாராம். சமீபத்தில் இவர் துபாய்க்கு ஒரு நடன நிகழ்ச்சிக்காகப் போயிருந்தபோது அங்கு பல ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு நீத்துவைப் பாராட்டித் தள்ளினராம். அவர்களது வாழ்த்து, புகழ்ச்சி மற்றும் ஜொள்ளு மழையில் சிக்கி நெகிழ்ந்தும், நெளிந்தும் போய் விட்டாராம் நீத்து. பலர் மேலும் ஒரு படி மேலே போய் உங்களைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூற, எனக்கு இன்னும் கல்யாண ஆசை வரவில்லை. அந்தத் திட்டமும் இல்லை என்று கூறினாராம் நீத்து.
Source: Dinakaran
Post a Comment