1/21/2011 2:29:18 PM
'ஆயிரத்தில் ஒருவன்Õ படத்தையடுத்து 'இரண்டாம் உலகம்Õ படத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா. அவர் கூறியது: நடிகைகள் 24 மணி நேரமும் தனது அழகை பேணுவதிலேயே கவனமாக இருப்பார்கள் என்று சொல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரை எந்நேரமும் மேக்கப்பில் இருக்க வேண்டும் என எண்ணியதில்லை. எப்போது கேட்டாலும் நான் ரொம்ப பிஸி என சிலர் சொல்வதுண்டு. பிஸி என்ற போலி முகமூடியை நான் அணிவதில்லை. ஒரு நடிகையாக, பாடகியாக இருப்பதால் எனது பெரும்பாலான நேரம் ஏர்போர்ட்டிலேயே காத்திருந்து கழிகிறது. ஆனாலும் நான் பிஸியானவள் கிடையாது. பேஸ்புக், இன்டர்நெட் என்று பொழுதை கழிக்க மாட்டேன். அவ்வப்போது எனக்கு வரும் மெயில் மட்டும் பார்த்துக் கொள்வேன். செல்வராகவன் திருமணம் செய்ய உள்ளதை பற்றி கேட்கிறார்கள். அது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
Post a Comment