1/3/2011 2:15:38 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
லவ் படத்துக்கு இசை அமைச்சவருக்கு நிறைய படங்கள் வரலையாம்… வரலையாம்… அது பற்றி யாராவது கேட்டா, 'நல்ல படங்களை மட்டும்தான் ஒத்துக்கிறேன்Õனு சொல்லி, நிறைய படங்களுக்கு இசை அமைக்க¤ற ஆசை இல்லாத மாதிரி காட்டிக்கிறாராம்… காட்டிக்கிறாராம்… உண்மை அது இல்லையாம். வாய்ப்பு வந்தா, சம்பளம் எக்கச்சக்கமா கேட்கிறாராம். அதனால தயாரிப்புங்க அலறியடிச்சி ஓடுறாங்களாம்… ஓடுறாங்களாம்…
இதனாலதான் இசைக்கு படங்கள் வரமாட்டேங்குதாம்… வரமாட்டேங்குதாம்…
மணியான இயக்குனரோட வாரிசுக்கு அரசியல் ஆசை குறைஞ்சி போச்சாம். சினிமாவை பத்தி ஏ டு இசட் படிக்கிறாராம்… படிக்கிறாராம்… 'இண்டஸ்ரியோட பைனான்ஸ் நிலவரத்தை அவன் அலசி வச்சிருக்கான். சீக்கிரமே பீல்டுக்கு வருவான்னுÕ தாய்க்குலம் சொல்றாராம்… சொல்றாராம்…
Post a Comment