தனுஷ் செய்த ஜாங்கிரி
1/28/2011 2:53:09 PM
தனுஷ் கவுரவ வேடத்தில் தோன்றும் படம் 'சீடன்'. மலையாளத்தில் ரிலீஸான 'நந்தனம்' ரீமேக்கான இதை சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். பிரசாத் லேப்பில் அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பு நடக்கிறது. ''கவுரவ வேடத்தில் நடிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். நான் சிவபெருமானின் தீவிர பக்தன். 'சீடன்' படத்தில் சிவன் வேடம் ஏற்க வேண்டும் என்று சுப்ரமணியம் சிவா சொன்னார். உடனே ஒப்புக்கொண்டேன்'' என்றார் தனுஷ். மேலும் 'சீடன்' படத்தில் தனுஷ் சமையல்காரராக கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஷூட்டிங்கில் அவரே செய்த ஜாங்கிரியை படக்குழுவினர் ருசித்து சாப்பிட்டார்களாம்.
Source: Dinakaran
Post a Comment