நடிகர் பா.விஜய் வீட்டில் கொள்ளை முயற்சி
1/18/2011 5:20:24 PM
1/18/2011 5:20:24 PM
வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் ராகவேந்திரா நகரில் சினிமா பாடலாசிரியரும் நடிகருமான பா. விஜய் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு, 1 மணியளவில் இவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து இரண்டு நபர்கள் உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜய்யின் பெற்றோர் திடுக்கிட்டு எழுந்தனர். விளக்கு வெளிச்சத்தில் இரண்டு வாலிபர்களின் நடமாட்டம் தெரிந்தது. விஜய் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ரோந்து பணியில் இருந்த போலீசார் பா.விஜய் வீட்டிற்கு விரைந்தனர். போலீஸ் வருவதை அறிந்த மர்ம நபா¢கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார், மர்ம நபர்களின் அடையாளங்களை விஜய்யின் பெற்றோரிடம் கேட்டறிந்தனர். மர்ம நபர்கள், திருடுவதற்காக வந்தார்களா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.
Source: Dinakaran
Post a Comment