1/24/2011 10:13:21 AM
சுவாமி சினி ஆர்ட்ஸ் சார்பில் துரைமுருகன் தயாரிக்கும் படம் 'செங்காத்து பூமியிலே'. ரத்னகுமார் இயக்குகிறார். பவன், செந்தில், பிரியங்கா, சுனுலட்சுமி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ரத்னகுமார் கூறியதாவது: படத்தின் கதையை சொல்லி இளையராஜாவை இசை அமைக்க கேட்டேன். 10 நாள் படப்பிடிப்பு நடத்தி, போட்டு காட்டுங்கள். பிடித்தால் இசை அமைக்கிறேன் என்றார். அப்படியே செய்தோம். படத்தை பார்த்துவிட்டு இசை அமைக்க ஒப்புக்கொண்டார். முழு படத்தையும் முடித்து விட்டு இசை அமைக்க கொடுத்தபோது, படம் அவருக்கு பிடித்துப்போக, வெளியிடும் உரிமையையும் நானே பெற்றுக் கொள்கிறேன் என்றார். இளையராஜா எங்கள் படத்தை வெளியிடுவதை பெருமையாக நினைக்கிறோம்.
Post a Comment