அமிதாப்புடன் நடிக்கிறேனா?
1/22/2011 10:42:46 AM
1/22/2011 10:42:46 AM
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள 'ஆடுகளம்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளவர் டாப்ஸி. அவர் கூறியதாவது: 'ஆடுகளம்' படத்தில் என் நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள். இதில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளேன். யதார்த்தமான கதைகளில் நடிக்கும்போதுதான் நம் திறமையை நிரூபிக்க முடியும். அப்படியொரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. பூரி ஜெகன்னாத் இயக்கும் 'புட்டா' என்ற படத்தில் அமிதாப்புடன் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது. அந்தப் படத்துக்கு என்னிடம் கால்ஷீட் கேட்டது உண்மைதான். அவர்கள் கேட்ட தேதி என்னிடம் இல்லாததால் மறுத்துவிட்டேன். அமிதாப்புடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம்தான். தமிழில், 'வந்தான் வென்றான்' படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறேன். இதில் எனது கேரக்டர் மாடர்னானது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.
Source: Dinakaran
Post a Comment