1/19/2011 4:59:36 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
கோலிவுட்ல நிரந்தர இடம் பிடிக்கணும்னு சரத்தான மலையாள இசைக்கு ஆசையாம்… ஆசையாம்… ஏற்கனவே ஜூன் மாசம் பேர்ல வந்த படத்துல அடிச்ச மியூசிக், தேறல. நீண்ட நாளுக்கு பிறகு சித்தார்த்த நடிகர் நடிக்கிற ஒன் எய்ட்டி படத்துல மியூசிக் பண்றாரு. இதுல வாய்ப்பு கிடைக்க அந்த நடிகரோட நட்புதான் காரணமாம்… காரணமாம்…
ஒரு நேரத்துல ஒரு படம்ங்கிற பாலிசி வச்சிருந்தாரு பிரகாச ஹீரோ. அதை கைவிட முடிவு பண்ணியிருக¢கிறாராம்… பண்ணியிருக்கிறாராம்… ஒரே நேரத்துல மூணு படத்துல நடிக்கவும் பிளான் போட்டிருக்கிறாராம்… போட்டிருக்கிறாராம்…
முருக இயக்குனரு தயாரிக்கிற பட ஷூட்டிங் இன்னும் தொடங்கல. படத்துல நடிக்கிறவங்ககிட்ட, கதை, கேரக்டர் பற்றி வெளியே எதுவும் பேசக்கூடாது. நேரத்துக்கு ஷூட்டிங் வரணும் என்பது உள்பட நிறைய நிபந்தனைகளை போட்டிருக்காங்களாம்… போட்டிருக்காங்களாம்… எல்லாத்தையும் ஒப்பந்தமா எழுதியும் வாங்கியிருக்காங்களாம்… வாங்கியிருக்காங்களாம்…
Post a Comment