மீண்டும் தரணி – விக்ரம் கூட்டணி!
1/24/2011 12:30:56 PM
நண்பர்களான தரணி-விக்ரம் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. தில் மற்றும் தூள் போன்ற கமர்ஷியல் சூப்பர் ஹிட் இந்த கூட்டணி, இடையில் இணை முடியாத சூழல் காணப்பட்டது. தெலுங்கில் பிசியாக இருக்கும் இயக்குனர் தரணி ராம் சரண் தேஜா நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார். அதே போல் தற்போது விஜய் இயக்கத்தில் ‘தெய்வ மகன்’ படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் தமிழ்ப் படத்தை தரணி இயக்குவார் என சொல்லப்படுகிறது. விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Source: Dinakaran
Post a Comment